நாளை மாலை 6 மணி முதல் தமிழகம் முழுவதும் 144 தடை உத்தரவு!

தமிழகம் முழுவதும் நாளை மாலை 6 மணி முதல் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவானது நாளை மாலை 6 மணி முதல் 31ஆம் தேதி வரை தொடரும்.தொற்று நொய் சட்டம் 1997 (2) உத்தரவின் பேரில் அனைத்து மாநில எல்லைகளும் மூடப்படுகிறது.

  • அத்தியாவசிய பணிகள் மற்றும் அவசரம் தவிர வேறு எந்த செயலுக்காகவும் பேருந்துகள், ஆட்டோக்கள் போன்ற பொது வாகனங்கள் இயங்காது.
  • பால், காய்கறிகள், மளிகை, இறைச்சி, மீன் கடைகள் தவிர வேறு கடைகள் இயங்காது, வணிக வளாகங்கள் மற்றும் பணிமையங்கள் இயங்காது
  • அத்தியாவசிய துறைகள் மட்டுமே இயங்கும்.
  • மருத்துவமனைகள் இயங்கும். நிறுவனங்கள் தக்க பாதுகாப்பு முறைமைகள் பின்பற்ற வேண்டும்.
  • அத்தியாவசிய கட்டிட பணிகள் மட்டுமே நடைபெற அனுமதி உள்ளது.
  • ஓட்டல்கள் பார்சல் மட்டுமே வழங்க வேண்டும்.

Leave a comment