தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு!

தமிழகத்தில் இரண்டு நாட்களாக வெப்பம் அதிகமாக உள்ளது. காஞ்சிபுரம், செங்கல்பட்டு, சென்னை மற்றும் தமிழகத்தின் உள் மாவட்டங்கள் நேற்று காற்று வெப்பம் மற்றும் மாசுடன் வீசியது. இன்று காஞ்சிபுரம், செங்கல்பட்டு, சென்னை மற்றும் தமிழகத்தின் உள் மாவட்டங்களில் அநேக இடங்களில் மழை பெய்த்து. நாளை தமிழகத்தில் அநேக இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையை பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டமாக காணப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சென்னையில் காற்று மாசுபாடு!!! ஏன்?

சென்னையில் தற்போது மழைக்காலமாக இருப்பதால், வெப்பநிலை குறைவாக இருக்கிறது, காற்று வீசும் திசையில் மாறுபாடுகள் இருப்பதால், ஆங்காங்கே மாசுபாடு புகைமூட்டமாக இருக்கிறது, டெல்லியில் உள்ள மாசுபாடு நிலை, சில ஆண்டுகளில் சென்னை நகரத்திற்கும் ஏற்படுமா என சென்னைவாசிகள் பலரையும் யோசிக்கவைத்துள்ளது. காற்று மாசுபாடு எந்த அளவில் உள்ளது, சென்னை நகரத்தில் மாசுபாடு உள்ள ஆபத்தான இடங்கள் எவை என பல கேள்விகள் எழுகின்றன.  அண்டை மாநிலங்களில் விவசாய நிலங்களில் கழிவுகளை எரிப்பதால், டெல்லியில் காற்று மாசுபாடு ஏற்படுகிறது.... Continue Reading →

நெய் பயன்கள், கடையில் விற்கும் நெய் சுத்தமானதா?

நெய் என்பது வெண்ணெயை உருக்கி, அதிலுள்ள நீரை முற்றிலுமாக நீக்கி, காய்ச்சுவதன் மூலம் அசுத்தங்கள், மாசு ஆகியவற்றையும் வெளியேற்றிய பின்னர் கிடைப்பதே நெய். லாக்டோஸ் உள்ளிட்ட பால் சார்ந்த புரதங்கள் வெண்ணெயிலிருந்து நீக்கப்படுகின்றன. இந்தியாவில் நெய் மிகவும் முக்கியமானது. பல்வேறு சமையல்களில் இது பயன்படுத்தப்படுகிறது. நெய்யில் 99.5 விழுக்காடு கொழுப்பு உள்ளது. 500 டிகிரி பாரன்ஹீட் வெப்பத்தில்தான் நெய் சூடாகி, புகை வெளிவர ஆரம்பிக்கும். உணவுக்கு அதிக சுவை கொடுக்கும் ஆற்றல் நெய்க்கு உண்டு நெய்யின் பயன்கள்... Continue Reading →

65 ஆண்டுகளாக தீபாவளி பண்டிகை கொண்டாடாத கிராமங்கள்!

தமிழகத்தில் 65 ஆண்டுகளாக தீபாவளி பண்டிகையை 13 கிராமங்களை சேர்ந்த மக்கள் கொண்டாடாமல் தவிர்த்து வருகின்றனர்.  சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே பல்வேறு கிராமங்கள் உள்ளன. அங்கு ஏரியூர் கிராமத்தை அடுத்த சிங்கம்புணரி ஒன்றியத்தைச் சேர்ந்த எஸ்.மாம்பட்டியை, தாய் கிராமமாக கொண்ட 13 கிராம மக்கள், கடந்த 1954ம் ஆண்டு முதல் தீபாவளி கொண்டாட்டங்களை தவிர்த்து வருகின்றனர். வறுமையில் வாழ்ந்து வந்த அப்பகுதி மக்கள், விவசாயத்திற்காகவும், தீபாவளி கொண்டாட்டங்களுக்காகவும், கடன் வாங்கி செலுத்த முடியாமல் தவித்துள்ளனர். இதனையடுத்து ஒன்று கூடிய ஊர்... Continue Reading →

திபாவளி பண்டிகைகாக தி.நகரில் குவியும் மக்கள்

தமிழகத்தில் மிகவும் பிரபலமான இடம் தியாகராய நகர் (தி.நகர்). திபாவளி பண்டிகை நெருங்குவதால் இங்கு மக்கள் கூட்டம் அலைமோதுகிறது, புதிய ஆடைகள், நகைகள் மற்றும் பொருட்கள் வாங்க வரும் மக்களை காவல்துறையினர் கண்கானிக்க ஆங்காங்கே கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது. குற்ற செயலில் ஈடுபடுபவர்களும் கண்காணிக்க படுகின்றனர்.  

இனி பேஸ்புக்கில் செய்திகளை படிக்கலாம்..!

நாட்டு நடப்புகளைத் தெரிந்துகொள்ள அடுத்தநாள் காலையில் வரும் நாளேடுகளுக்காக காத்திருந்த மக்கள் . பின்னர் செய்தி தொலைக்காட்சிகளின் வாயிலாகவும் தற்போது இணைய மயமாகிவிட்டது. ஒரு செய்தி ஒரே நொடியில் மில்லியன் கணக்கான மக்களின் கைகளில் உடனடியாக சென்று சேர்கிறது. இதற்கு முழு முதற்காரணம் சமூக வலைதளங்களின் பயன்பாடுதான். சமூக வலைத்தளங்களின் இந்த அபரிமிதமான வளர்ச்சி, தொலைக்காட்சியில் செய்தி நேரத்திற்காக காந்திருந்தவர்களை செல்போனை நோக்கி வரவைத்திருக்கிறது. அதிலும் சமூக வலைத்தளங்களில் பகிரப்படும் செய்திகள் எளிதில் மக்களை அடைந்துவிடுகிறது. இதனை... Continue Reading →

Powered by WordPress.com.

Up ↑